
பொழுதுபோக்கு
பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா மரணம்!
ஹைதராபாத்தில் பெண் ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்த காவலாளிகள் வாயிலில் இருந்து இன்டர்காம் மூலம் பிரத்யுஷா கரிமெல்லாவை தொடர்பு கொண்டனர். போன் பெல் அடித்தும் பதில் ஏதும் இல்லாமல் போனதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியலறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார்.
அவரது உடலை கைப்பற்றி போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளியல் அறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டிலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இவரது மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவர் பாலிவுட், கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோப்ரா, ஸ்ருதி ஹாசன், ஹூமா குரேஷி, ரகுல் ப்ரீத் சிங், வித்யா பாலன் ஆகியோர்களுக்கு ஆடைவடிவமைப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
