தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. அதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்து தற்போது மீண்டும் பட இயக்க தொடங்கி உள்ளார். தற்போது இவரது புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளாராம்.
அதன்படி தமிழ் கவிதை உலகில் முக்கிய அங்கமாக திகழ்ந்த கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான் கடந்த 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் இவரது நினைவாக இயக்குனர் லிங்குசாமி ஒரு கவிதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். சிவகுமார் என்பவருடன் இணைந்து இந்த போட்டியை லிங்குசாமி நடத்துகிறார்.
மேலும் கவிகோ அப்துல் ரகுமான் மீது கொண்ட அதீத அன்பு காரணமாகவே லிங்குசாமி இந்த போட்டியை நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுதவிர இந்த போட்டியில் கலந்துகொள்ள வயது வித்தியாசம் கிடையதாம். யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். 3 வரிகள் மட்டுமே கொண்ட ஹைக்கூ வகை கவிதைகள் மட்டும் அனுப்ப வேண்டும்.
ஒரு நபர் 2 கவிதைகள் வரை அனுப்பலாம். kavikohaikupotti@gmail.com என்கிற இணையதள முகவரிக்கு போட்டியாளர்கள் தங்கள் ஹைக்கூ கவிதைகளை அனுப்பவேண்டும். இந்த போட்டியின் முடிவு மார்ச் மாதம் அறிவிக்கப்படுமாம். அதுமட்டுமல்ல போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாம்.