தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர் ஜி.எம்.குமார். இவர் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கி வசூல் சாதனை படைத்தார்.
அதே போல் அவன் இவன் படத்தில் ஐனஸ் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. அதே சமயம் பரத் நடிப்பில் வெளிவந்த வெயில் படத்தில் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமானது.
இந்நிலையில் இயக்குனர் ஜிஎம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.