Connect with us

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்!! வெளியான அப்டேட்..

sarda

பொழுதுபோக்கு

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்!! வெளியான அப்டேட்..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் கார்த்திக். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு போன்ற நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளனர். இதனிடையே இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். அதோடு பிரின்ஸ் பிக்சர் பேனில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இதனிடையே தீபாவளியை டார்கெட் செய்யும் இப்படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘சர்தார்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தை வெளியிடும் உரிமையை எந்த நிறுவனம் கைப்பற்றும் என எதிர்பார்ப்பு சினிமா துறை வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இதுவரையில் மொத்தம் 15 படங்களை தயாரித்தும் 30-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top