
Entertainment
இவரா அப்போ படம் வேற லெவலு; தளபதி 66 திரைப்படத்தில் கமிட்டான பிரபல காமெடி நடிகர்?
தனது முக பாவனையாலும் எதார்த்தமான நடிப்பாலும் மிகப் பெரிய காமெடி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு உள்ளவர்தான் நடிகர் யோகிபாபு. காமெடி நட்சத்திரமாக மட்டுமின்றி கதாநாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான கூர்கா திரைப்படம் இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது. இருப்பினும் கூட ஏராளமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலேயே அதிக அளவில் நடித்துக் கொண்டு வருகிறார்.
அதுவும் குறிப்பாக தமிழகத்தின் தளபதி என்று அழைக்கப்படுகின்ற நடிகர் விஜயுடன் அடுத்தடுத்த படங்களில் இவர் நடித்துக் கொண்டு வருகிறார். மெர்சல் தொடங்கி பீஸ்ட் திரைப்படம் வரை வரிசையாக விஜயோடு யோகி பாபு நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மற்றுமொரு அடுத்த விஜய் படத்தில் யோகி பாபு கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது. அதன்படி தளபதி 66 என்று பெயர் வைக்கப்படாத திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
