Connect with us

சமந்தா வரிசையில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை….!

samantha 1

பொழுதுபோக்கு

சமந்தா வரிசையில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை….!

சமந்தா வரிசையில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை….!

முன்பெல்லாம் மார்க்கெட் இழந்த நடிகைகளும், பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளும் மட்டுமே எப்படியாவது திரையில் தெரிந்தால் போதும் என்பதற்காக ஒரு பிரபல நடிகரின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவார்கள். மற்றபடி முன்னணி நடிகைகள் யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட மாட்டார்கள்.

எங்கே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினால் மார்க்கெட் போய்விடுமோ அல்லது அடுத்தடுத்து இதே நிலை தொடர்ந்து விடுமோ என்ற பயத்தால் டாப் நடிகைகள் இந்த முடிவை எடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படியே மாறி விட்டது. சமந்தா போன்ற டாப் நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட்டடித்தது. இந்நிலையில் இவரை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகையும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

tamanaah

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை தமன்னா தான் தற்போது ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அதன்படி இயக்குனர் கிரண் கொரபாட்டி இயக்கத்தில் வருண் தேஜா நாயகனாக நடிக்கும் கனி என்ற படத்தில் தமன் இசையில் கூட்தே என்ற பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பாடலை ராம்ஜோகய்யா சாஸ்திரி எழுத ஹரிகா நாராயண் பாடியுள்ளார்.

இந்த பாட்டுக்கு தான் தற்போது தமன்னா குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக புஷ்பா படத்தில் சமந்தா போட்ட குத்தாட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான ரீச் கிடைத்தது. அதுமட்டும் இன்றி அப்படத்தில் ஹீரோயினாக நடித்து ராஷ்மிகாவை விட சமந்தாவை தான் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இதுதவிர அந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட சமந்தா சுமார் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதனால் சமந்தா பாணியில் நாமும் இறங்கி விடலாம் என்ற முடிவில் கூட தமன்னா இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. என்னதான் இருந்தாலும் சமந்தா அளவுக்கு வருமா என்பது தெரியவில்லை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top