தமிழ் சினிமாவில் முதல் முறையாக கடல் கன்னியாக மாறிய பிரபல நடிகை…!

நடிகர் மற்றும் நடிகைகள் படங்களுக்காக தங்களது கெட்டப்புகளை மாற்றி நடிப்பது உண்டு. பெரும்பாலும் ஹீரோக்களுக்கு தான் கெட்டப்புகள் இருக்கும். ஹீரோயின்களுக்கு மிகவும் குறைவாகவே புதிய கெட்டப்புகள் கிடைக்கும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் கடல் கன்னியாக நடிக்க உள்ளாராம்.

அவர் வேறு யாருமல்ல தனது நடிப்பு மற்றும் குரல் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தான். இறுதியாக இவர் நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியாகி ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர கா, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை என கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதற்கிடையில் பாடல்களும் பாடி வருகிறார். சமீபத்தில் கூட அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடலுக்கு நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் கடல் கன்னியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே கடல் கன்னியாக நடிக்கும் முதல் நடிகை என்ற பெருமையை ஆண்ட்ரியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா தவிர இப்படத்தில் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்க உள்ளார்களாம். கடல் கன்னி என்பதால் திருச்செந்தூர் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment