Connect with us

25 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பிரபல நடிகை! யாரிடம் தெரியுமா?

News

25 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பிரபல நடிகை! யாரிடம் தெரியுமா?

4fc7458cd5a57821d3e5c7398872727e

பிரபல நடிகை ஒருவர் ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச படம் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அவர் ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிக்கு அனுப்பியதாக ஆதாரம் இருந்ததை அடுத்து மும்பை போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்பட்டது

இந்த வழக்கில் தன்னை பற்றி தவறான கருத்துக்களை பதிவு செய்த ஊடகங்கள் மீது ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டில் நடிகை ஷில்பா ஷெட்டி தாக்கல் செய்த நிலையில், 29 ஊடகங்கள்தான் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த வழக்கு நாளை மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top