கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை அகன்ஷா மோகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ’சியா’ என்ற பாலிவுட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 16ஆம் வெளியாகின நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே சமயம் மாடல் அழகியான இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு என்ற பகுதியில் பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
அதில் எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல… யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், நான் மகிழ்ச்சியாக இல்லை அமைதியை மட்டுமே விரும்புகிறேன் என குறிப்பிடுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.