20 லட்சம் பார்வையாளர்களை கொண்ட பிரபல நடிகரின் யூடியூப் சேனல் முடக்கம்!

1c4499a26ef4efa07fe73ff98da6db4e-2

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

20 லட்சம் பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனலை ஹிப் ஹாப் தமிழா ஆதி வைத்திருந்த நிலையில் அவருடைய பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளன என்பதும் அவருடைய யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

சமீபத்தில் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு அதன் பின்னர் சரியான நிலையில் தற்போது ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்தநிலையில் முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீண்டும் கொண்டுவர ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் அவரது யூடியூப் பக்கம் மீண்டு விடும் என்றும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.