லாரன்ஸுக்கு வில்லனான பிரபல நடிகர்… வெளியான வேற லெவல் அப்டேட்…!

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. முதன் முதலில் பேயை வைத்து காமெடி செய்தது லாரன்ஸ் தான். அதனை தொடர்ந்தே பல பேய் படங்கள் வெளியானது.

ருத்ரன்

தற்போது லாரன்ஸ் ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜிகர்தண்டா, பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படமும் பேய் படமாகத்தான் இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே தெரிந்தது. படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் ருத்ரன் படத்தில் வீர திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் என்ற பாடலை ரீமேக்ஸ் செய்துள்ளார்ளாம்.

சரத்குமார்

தற்போது படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ருத்ரன் படத்தில் லாரன்ஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பாக சரத்குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வந்த சரத்குமார் தற்போது குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் தற்போது அதர்வா, விஜய் ஆண்டனி போன்றோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ருத்ரன் படமும் இணைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment