
Entertainment
திரையுலகமே அதிர்ச்சி..! பிரபல நடிகர் டேனியல் பிலிப் மரணம்..
பிரபல மலையாள நடிகர் டேனியல் பிலிப் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த திருவல்லா பகுதியில் நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான பிரளயம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
பின்னார் கோட்டயம் குஞ்சச்சன் , வேட்டன், அர்த்தம், பழசிராஜா போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்நிலையில் இவர் நடித்த திரைப்படங்கள் குறைவாக இருந்த போதிலும் இவரின் அசத்தலான நடிப்பு ரசிகர்களை ஈர்த்ததால் பெரிதும் இடம்பிடித்தார். குறிப்பாக இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே உடல்நலக்குறைவு ஏற்பட்ட இவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் திடீரென சிகிச்சை பலனின்றி 76-வது வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
