Connect with us

குடும்ப கட்டுப்பாடு… இழப்பீட்டு தொகை 60 ஆயிரமாக உயர்வு!!!

ஹை கோர்ட்

தமிழகம்

குடும்ப கட்டுப்பாடு… இழப்பீட்டு தொகை 60 ஆயிரமாக உயர்வு!!!

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடையும் பட்சத்தில் இழப்பீடு தொகையானது 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அடுத்த பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டும் குடும்பக்கட்டுப்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் கருவுற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி அடைந்ததால் தனக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கனிமொழி வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே மனுதாரர் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவ துறை அதிகாரிகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் இருப்பதனால், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top