ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! யாருக்குமே கிடைக்காத புகழ்-தமிழிசைக்கு அடித்த ஜாக்பாட்!
இன்றைய தினம் இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பல தலைவர்கள் வரிசையாக தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். அதிலும் நம் தமிழகத்தில் தற்போதைய ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றினார். அவர் தேசியக் கொடியை ஏற்றிய போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தினத்தில் இரண்டு மாநிலங்களில் ஒரே ஆளுநர் கொடியேற்றியது அவருக்கு பெருமை அளிப்பதாக காணப்படுகிறது. அதன்படி இரண்டு மாநிலங்களில் கொடியேற்றினார் பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன்.
குடியரசு தினத்தை ஒட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கொடி தேசிய கொடி ஏற்றினார் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெலுங்கானா. தெலுங்கானா ஆளுநர் புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநராக உள்ளதால் இரண்டு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானாவில் தேசிய கொடியேற்றிய தமிழிசை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்து மரியாதை செலுத்தி வருகிறார்.
