தனக்கு சீட் கொடுக்காத காலேஜ்க்கு சீஃப் கெஸ்ட்டா வந்து அசத்திய இளம் நடிகை….!

ஆல்பம் பாடல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே நடிகர் முகேன் ராவ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பங்கேற்ற சீசனில் மக்களின் பேராதரவு இருந்ததால் அந்த சீசன் டைட்டிலை தட்டி தூக்கினார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

வேலன்

அதன் பலனாக முகேன் அறிமுக இயக்குனர் கவின் மூர்த்தி என்பவர் இயக்கத்தில் வேலன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முகேனுக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் என்ற இளம் நடிகை நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர சூரி, பிரபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

வேலன்

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை மீனாட்சி, “இந்த கல்லூரியில் மூன்று வருடத்திற்கு முன்பு படிப்பதற்காக சீட் கேட்டு வந்தேன். அப்போது கிடைக்கவில்லை. ஆனால் இப்போது ஒரு நடிகையாக, செலிபிரிட்டியாக அதே கல்லூரிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.

நடிகை மீனாட்சி வேலன் படத்தில் மட்டுமல்ல விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் சிவ சிவா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் வெளியானால் நிச்சயம் மீனாட்சி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞனுக்கும், கிராமத்தில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே உண்டாகும் காதலை மையாக வைத்து ஒரு பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி உள்ள வேலன் படத்தை ஸ்கைன் மேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment