‘நர்சரி பள்ளிகள் திறப்பு’;முதல்வர் அறிவித்தவை தவறு என்று கூறும் அமைச்சர்!!!

நம் தமிழகத்தில் இரு தினங்கள் முன்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில் திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்கு ஊர்வலம் போன்றவற்றிற்கான அறிவிப்புகளை அறிவித்தார்.அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மத வழிபாட்டுத் தலங்களில் திறப்பு குறித்தும் அந்த அறிக்கையில் வெளியானது. அதோடு தமிழகத்தில் நர்சரி மற்றும் பிரைமரி மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தும்  அறிவிப்பில் காணப்பட்டிருந்தது.

அதில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பு தவறாக வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அதன்படி நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். முதல்வர் ஆலோசனையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது பற்றி தான் விவாதித்தோம் என்றும், இது குறித்து விவாதிக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது, அவர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment