தங்கத்தின் விலை படு சரிவு! கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!!

நாளைய தினம் தமிழகத்தில் பண்டிகை தினம் கொண்டாடப்பட உள்ளதால் வியாபாரங்கள் தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இலைகளின் மத்தியில் தீபாவளிக்கு நகை எடுப்போர்க்கு இன்றைய தினம் அதிரடி நாளாக இருக்கும் என்று காணப்படுகிறது.தங்கம்
பொதுவாக சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சென்னையில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.
பொதுவாக தங்கத்தின் விலை நிலையில்லாதது என்பதே உண்மையாகும். இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 482 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 35 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 67.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைய தினம் தங்கத்தின் விலை மிகவும் குறைவாகவே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.இதனால் நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நாளைய தினம் தீபாவளி என்பதால் இன்றைய தினமே நகை வாங்குவோருக்கு இவை மிகவும் மகிழ்ச்சியை அள்ளித் தந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment