Connect with us

சென்னை மற்றும் செங்கல்பட்டில் இரவு முதல் தொடர் கனமழை…!! மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை;

கனமழை

Tamil Nadu

சென்னை மற்றும் செங்கல்பட்டில் இரவு முதல் தொடர் கனமழை…!! மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை;

இந்த கோடை காலத்தில் வடதமிழக மாவட்டத்திற்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்துகொண்டு வருகிறது. ஏனென்றால் தற்போது பெரும்பாலான வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அசனி புயல் கரை கடக்க இருப்பதால் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் சென்னையில் இரவு நேரத்தில் இருந்து தற்போது வரை கன மழை பெய்து வருவதாக தெரிகிறது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம், சேலம், திருச்சி, திருவாரூர் தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top