மதுரையில் மாலையில் தொடங்கிய மழை; குளுகுளுவென்று மாறிய வானிலை!!

கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இரண்டு நாட்களாக தென் தமிழகப் பகுதிகளான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த மழையானது மாலை முதல் தொடங்குவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகின்ற மதுரையில் மிதமான மழை பெய்து கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த மிதமான மழை பெய்கிறது. காளவாசல், அரசரடி, பெரியார், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, புதூர் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனால் மதுரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர். காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவது குழு குழு என்று வானிலையை உருவாக்கியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment