Connect with us

புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த மழை..!! நகர்ப்புறங்களில் இரவு பெய்ய வாய்ப்பு?

rain 1

தமிழகம்

புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த மழை..!! நகர்ப்புறங்களில் இரவு பெய்ய வாய்ப்பு?

தற்போது சென்னை மாவட்டத்தின் நகர் பகுதியில் மேகம் கருகருவென்று காணப்படுகிறது. இதனால் இன்று இரவு நகர்புற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலையிலேயே இருந்து சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதன்படி சென்னை புறநகர் பகுதிகளாக உள்ள பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், ஆவடி மற்றும் திருநின்றவூரில் தொடர்ந்து மழை பெய்தது.

மேலும் திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தன. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், மாதவரம், புழல், ஊத்துக்கோட்டை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

அதனை அடுத்து அனகாபுத்தூர், கீழ் கட்டளை, இக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியுள்ளதாக தெரிகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிர்ச்சியான வானிலையை உணர்ந்து கொண்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top