Connect with us

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை-மக்கள் மகிழ்ச்சி;

chennai rains9

தமிழகம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை-மக்கள் மகிழ்ச்சி;

நேற்றைய தினம் மாலையிலேயே அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழைக்குப் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

மேலும் நேற்று குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கைகளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்திருந்தது. அதன் விளைவாக நேற்று இரவு தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னை உள்ள நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்திருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிச்சலும் ஏற்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கோயம்பேடு, பழனி, மதுரவாயில், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் உள்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட நகரின் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top