Connect with us

சென்னை நகர்ப்புற பகுதிகளை குறிவைத்து அடிக்கும் கனமழை!!

மழை

தமிழகம்

சென்னை நகர்ப்புற பகுதிகளை குறிவைத்து அடிக்கும் கனமழை!!

இன்றைய தினம் காலை முதல் சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதுவும் குறிப்பாக பூந்தமல்லி குன்றத்தூர் மாங்காடு ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

மேலும் அனகாபுத்தூர், கீழ்கட்டளை, போரூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மாலை தினம் சென்னை நகர்ப்புற பகுதியில் மேகம் கருகருவென்று காணப்பட்டது.

இதனால் இன்று இரவு சென்னையில் கன மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கொட்டி தீர்த்துக் கொண்டு வருகிறது கனமழை. அதன்படி சென்னை-ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடு கட்டி இருப்பவர்கள் அச்சத்தோடு இரவை கழிக்கும் நிலையில் காணப்பட்டுள்ளது. ஏனென்றால் அதிக கனமழை பெய்தால் வீட்டிற்குள் மழை நீர் தேங்கும் என்பது அவர்களின் அச்சமாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top