நேற்றைய தினம் சென்னையின் புறநகர் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவு நேரங்களில் சென்னை நகர்புற பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதுவும் குறிப்பாக கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போதும் இன்று மதியத்திற்கு பின்பு சென்னை நகர்புற பகுதிகளில் கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதன்படி சென்னை கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், சேத்துப்பட்டு, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது.
மேலும் வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், மதுரவாயில் உள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தலைநகர் சென்னைக்கு அடுத்து 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நகர்ப்புறங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.