
Tamil Nadu
ஆன்லைனில் வரன் தேடுபவர்களே உஷார்!! எச்சரிக்கும் டிஜிபி..
திருமண இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் பெண்களை குறிவைத்து மோசடிகள் அதிகம் நடக்கும் நிலையில் இதுபோன்ற மோசடி நபர்களிடம் எச்சரிகையாக இருகக் வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போலியான ஆப்கள் மூலம் டாக்டர் வரன் இருப்பதாக கூறி அந்த போலியான நபரை அறிமுகப்படுத்தி உங்களிடம் தொடர்பு ஏற்படுத்தி உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறினார். அந்த பரிசு பொருள் ஏர்போர்ட்டில் வரும் போது கஷ்டமர் உங்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு கூறுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த பரிசு பொருளானது 30 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ளது என ஆசைக்காட்டி 3 லட்சம் என்ற அளவில் பணம் கொடுக்க சொல்வார்கள் என அவர் தெரிவித்தார். இதனிடையே இதுபோன்று பலமுறை உங்களை ஏமாற்றி உங்களை நேரில் பார்க்க வருவதாக மெசேஜ் கொடுப்பார்கள் என்றும் அப்போது அவர் மும்பை ஏர்போர்ட்டிற்கு வருவார் என தெரிவித்தார்.
அந்த சமயத்தில் தன்னிடம் விசா இல்லாத காரணத்தினால் நான் ஏர்போட்டில் இருப்பதாகவும் இந்த அக்கவுண்டுக்கு தயவு செய்து பணம் அனுப்புமாறு உங்களை ஏமாற்றி 20 முதல் 30 லட்சம் வரையில் பணத்தை வாங்கிவிட்ட பிறகுதான் இவர்கள் மோசடி கும்பல் இருப்பது தெரியவரும் என கூறினார்.
இதே போன்று பல பெண்கள் ஆன்லைனில் வரன் தேடுபவர்கள் ஏமாந்து இருப்பதாகவும் எனவே வரும் காலங்களில் வரன் தேடும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் ஒருவர் உங்களிடம் பணத்தை கேட்பவர் என்றால் அவர் மோசடி நபர் என டிஜிபி கூறியுள்ளார்.
