அந்த ஒரு போலி செய்தி என்னை இன்னும் தொந்தரவு செய்கிறது- நேரம் பட இயக்குனரின் கவலை!..

தமிழில் நேரம் படத்தையும் மலையாளத்தில் புகழ்பெற்ற பிரேமம் படத்தையும் இயக்கியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன்.

இவர் ரஜினியை வைத்து இயக்க பிரியப்படுபவர் 99 சதவீதம் ரஜினியை வைத்து இயக்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும் என கூறுகிறார்.

2015ல் பிரேமம் ரிலீஸ் ஆன போது ரஜினியை வைத்து இவர் படம் இயக்க இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவ்வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போக, ரஜினியை வைத்தும் இயக்கும் எண்ணம் எனக்கு இல்லை என இவர் சொல்லியதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டு விட்டதாம் .

அந்த செய்தி வைரல் ஆக கடைசியில் செளந்தர்யா ரஜினிகாந்தே இவரிடம் கேட்டுவிட்டாராம் பிறகு நான் அப்படி சொல்லவே இல்லை என இவர் மறுத்துள்ளார்.

ரஜினியை நான் இயக்கி இருந்தால் பல நூறு கோடிகளை வசூலித்திருக்கும் அந்த படம்.

ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதில்லை என நான் சொல்லாமல் சொன்னதாக வந்த செய்தியால் அந்த செய்தி இன்னும் என் மனதை பாதித்துள்ளது என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment