போலியான ஹெட்போன் விற்பனை; தோப்புக்கரணம் போட்டு கெஞ்சிய வடமாநில இளைஞர்!

இந்தியாவில் அதிக அளவு போலியான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. அவை உணவுப் பொருட்கள் தொடங்கி மின்னணு சாதனங்கள் வரை என அனைத்திலும் போலியான பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஹெட் போன்

இந்நிலையில் பிரபல பெயரில் போலியாக ஹெட்போன், சார்ஜர் பவர் பேங்க் விற்ற வட இந்தியனை மொபைல் கடை உரிமையாளர்கள் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த வட இந்திய மாநில இளைஞர் பிரபல மொபைல் நிறுவனமான ஒப்போ,விவோ, ரியல்மி போன்ற நிறுவனங்களின் பெயரில் போலியான ஹெட்போன்கள், பவர் பங்குகளை மலிவான விலையில் சந்தையில் குவித்துள்ளார்

போலியான பொருட்களின் வரவால் கடை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி வாங்கி பயன்படுத்துகின்றன. கஸ்டமர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் வடமாநில இளைஞர் மலிவான விலையில் பிரபல கம்பெனி ஹெட்போன்களை விற்பனை செய்வதாக உரிமையாளருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் சென்று பார்த்தபோது அவை அனைத்தும் போலி என்று தெரியவந்தது.

இதனால் அந்த வடமாநில இளைஞர் மடக்கிப் பிடித்த மொபைல் கடை நிறுவனங்கள் உடனடியாக காவல்துறைக்கு போன் செய்தனர். இதனால் அஞ்சிய அந்த வடமாநில இளைஞர் கடை உரிமையாளர் காலில் விழுந்து போலீசே வரவேண்டாம் என்று கெஞ்சினார்.

அதோடு தோப்புக்கரணம் போட்டும் கெஞ்சினார் வடமாநில இளைஞர். இதன் பின்னர் காவல்துறையினர் வந்து, காவல் அதிகாரி காலிலும் அந்த வடமாநில இளைஞர் விழுந்துள்ளார்.

பின்னர் அவனை எச்சரித்து விட்டு போலீசார் அனுப்பி உள்ளனர். இந்த வடமாநில இளைஞர் மகாராஷ்டிர மாநிலத்தை மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment