போலி சாதி சான்றிதழ்: விதிகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் குறிப்பிட்ட சமூதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதிசான்றிதழ் வழங்குவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க உத்தரவிட கோரிய மனுவை பரீசிலிக்க உத்தரவிட கோரி சொக்கலிங்கம் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோல் பழங்குடியினர், பட்டியலினத்தவர் சாதிசான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே விதிகளை வகுந்துள்ளதாகவும், அதன் படி மாநில அளவில் சாதிசான்றிதழ் சரிபார்க்க குழுக்கள் அமைக்க வேணும் என தெரிவித்துள்ளனர்.

சிக்கனில் இருந்து துர்நாற்றம்! சிக்கிய 10 கிலோ இறைச்சி… நாமக்கல்லில் பரபரப்பு!!

அதே போல் போலி சான்றிதழ் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் பட்டியலினத்தவர் பழங்குடியினர் எனக் கூறி சான்றிதழ் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால் உரியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதிகளை வகுத்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதிகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தால் அதன் அடிப்படையில் சாதிசான்றிதழ் வழங்குதல் வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

டேட்டிங் ஆப் மூலம் மோசடி.. போலீசார் எச்சரிக்கை!

மேலும், போலிசான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுத்து இதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.