ரேஷன் கடைகளில் போலி பில்! – விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடையில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் போலி பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவிறுத்தல் வழங்கியுள்ளார்.

அதே போல் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நிலவி வரும் சூழலில் கூட்டுறவு துறை பதிவாளர் சண்முகசுந்தரம் அறிவிறுத்தல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.