
செய்திகள்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ‘நாளை முதல் 1000 ரூபாய் அபராதம்’!!
இந்தியாவில் உள்ள குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதுவும் குறிப்பாக ஆதார் எண்ணை அரசு அடையாள அட்டைகள் பலவற்றுடன் இணைக்கும் முயற்சியும் விரைவாக நடைபெற்று கொண்டு வருகிறது.
குறிப்பாக குடும்ப அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் இணைக்கும் முயற்சிகள் மற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினம் முதல் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் அபராதம் இரு மடங்காகிறது.
2023 மார்ச் மாதத்திற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு ரத்து செய்ய வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
