பகத் பாசிலுக்கு டஃப் கொடுக்க இவரால மட்டும் தான் முடியும்! இரண்டு பேரையும் ஒரே திரையில் பார்க்க ஆசையா?

புஷ்பா திரைப்படம் தான் இவரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் அவர் வந்திருந்தாலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் மனதில் முழுவதுமாக பதிந்து போனவர் இவர். அதிலும் குறிப்பாக ஒன்னு குறைச்சலா இருக்கு என்ற அந்த ஒற்றை வரி வசனத்தால் அனைவரையும் கவர்ந்தவர்.

அவர்தான் பகத் பாசில். பேன் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படத்தால் உலக அளவில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் பகத். அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கின. விக்ரம் படத்தில் ஒரு பிரைவேட் ஏஜென்ட் ஆக வந்து கடைசியில் கமலுடன் ஒரு சில காட்சிகளில் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் சாதி பெருமை பேசும் ஒரு கொடூரமான வன்மம் நிறைந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் பகத். நடிப்பு அரக்கன் என்ற பெயரும் அவருக்கு இப்போது ரசிகர்களால் கொடுக்கப்பட்டிருக்கிறது. மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவும் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டல்கள் விழுந்த வண்ணம் இருக்கின்றன. பெரிய இயக்குனரின் மகன் என்பதாலோ அவருக்கு இந்த சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. மலையாள சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் இன்று புகழ்பெற்று இருக்கும் பகத் பாசில் ஒரு மிகப்பெரிய தோல்வி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் என்றால் நம்ப முடிகிறதா?

அவருடைய முதல் படமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படுமோசமாக விமர்சிக்கப்பட்டது. இதனால் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வர பகத் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயில சென்று விட்டார். அதன் பிறகு தான் இந்தியா திரும்பி மீண்டும் சினிமாவில் ரீ என்றே கொடுத்தார். இப்போது நடிப்பு என்றாலே பகத் என்ற பெயர்தான் அனைவரும் மத்தியில் எழுந்து வருகிறது. மலையாளத்தில் எப்படி நடிப்பு அரக்கன் என்று இவரை கொண்டாடுகிறார்களோ அதே போல தமிழில் நடிப்பு அரக்கன் என நாம் கொண்டாடுவது எஸ் ஜே சூர்யா.

கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான மனப்பக்குவம் கொண்டவர்கள் தான். ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் தான். எதையும் அசால்ட்டாக தூக்கி சாப்பிடக்கூடியவர்கள். இந்த இரண்டு பேரையும் ஒரே திரையில் பார்க்கும்பொழுது அந்த திரையரங்குகள் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கும் என்பதை கனவிலும் நம்மால் நினைக்க முடியவில்லை.

ஆனால் அது கூடிய சீக்கிரம் நடைபெற போகிறது. ஆமாம் இதன் மூலம் எஸ் ஜே சூர்யா மலையாள சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அது பகத் பாசிலுடன் இணைந்து டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இருவரும் சேர்ந்து கலக்க இருக்கிறார்கள். அதை பற்றிய செய்தி கூடிய சீக்கிரம் வெளியாகும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...