ஜனவரி 1 மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டு? அப்ப 2000 நோட்டு என்ன ஆகும்?

ஜனவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருப்பதாகவும் தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அப்போது புழக்கத்தில் இருந்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்டன என்பதும் அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

money

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் வங்கிகளுக்கு வரும் 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் பொதுமக்களிடம் கொடுக்க வேண்டாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி மீண்டும் 1000 ரூபாய் நோட்டு ஜனவரி 1 முதல் வரவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரூ.1000 நோட்டு புழக்கத்திற்கு வரும் என்பது தவறான தகவல் என்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு தடை செய்யும் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.