பெண் ஊழியரின் வாழ்க்கையையே மாற்றிய பேஸ்புக் பதிவு… ஒரே நைட்டில் கோடீஸ்வரியான சம்பவம்….

பொதுவாகவே உணவகங்கள் அல்லது பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு சென்று உணவருந்தினால், பில் செலுத்துவதோடு நமக்கு உணவு பரிமாறிய ஊழியர்களுக்கு டிப்ஸ் வழங்குவது வழக்கம். அதுவும் அந்த ஊழியரின் பணி மற்றும் நடவடிக்கையை பொறுத்தே டிப்ஸ் தொகை நிர்ணயிக்கப்படும்.

தற்போது ஒரு டிப்ஸ் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி மாற்றியுள்ளது என்பதை தான் பார்க்க போகிறோம். அதன்படி அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் ஜாஸ்மின் காஸ்டிலோ என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அந்த உணவகத்திற்கு ரிட்டா ரோஸ் என்ற பெண் அவரது தாயாருடன் உணவருந்த சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் இருவரும் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகை 30 அமெரிக்க டாலர்கள். ஆனால் ரிட்டா ரோஸ் உணவுக்கான பில் தொகை போக 20 அமெரிக்க டாலர்களை உணவு பரிமாறிய பெண் ஊழியர் ஜாஸ்மினுக்கு டிப்ஸாக வழங்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள ரிட்டா, “நானும் எனது அம்மாவும் IHOP உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறிய ஜாஸ்மின் என்ற சப்ளையர் மிகவும் சிறப்பாக அவரது பணியில் ஈடுபட்டார். மிகவும் கனிவாக எங்களை கவனித்து பொறுமையுடன் உணவை பரிமாறினார். அதற்காக அவருக்கு 20 டாலர் டிப்ஸ் கொடுத்தேன்.

அதை பெற்றுக்கொண்ட அவர் இந்த 20 அமெரிக்க டாலர் தனக்கான பெரிய உதவி என கூறினார். பிடிக்கவில்லை என்றாலும் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக அவர் இந்த பணியை செய்து வருகிறார். எனவே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்” என பதிவு செய்து ஜாஸ்மினின் கேஸ் ஆப் விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் நாளடைவில் ஜாஸ்மினின் வாங்கி கணக்கில் சுமார் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது. இதனையடுத்து தனக்கு உதவி செய்த அனைவருக்கும் ஜாஸ்மின் நன்றி தெரிவித்துள்ளார். ஹோட்டலுக்கு வந்தோமா சாப்பிட்டோமா என்று செல்லாமல் ஊழியரின் குறையை கேட்டு அவருக்கு உதவி செய்த ரிட்டாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment