
News
ஃபேஸ்புக்கின் புதிய பெயர் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஃபேஸ்புக்கின் புதிய பெயர் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக்கின் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளி வந்த நிலையில் நேற்று பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸக்கர்பர்க் பேஸ்புக்கின் புதிய பெயரை அறிவித்துள்ளார். இதனை அடுத்து பேஸ்புக் இனி மெட்டா என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஃபேஸ்புக் என்ற பெயர் ஏற்கனவே உலக அளவில் பிரபலமாகி விட்ட நிலையில் தற்போது மெட்டா என்ற பெயர் எந்த அளவுக்கு விரைவில் பிரபலமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
மேலும் பேஸ்புக்கில் விஆர் மற்றும் ஏஆர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார். மேலும் பேஸ்புக்கை மேலும் மேம்படுத்துவதற்காக 10 ஆயிரம் ஊழியர்கள் பணியில் அமர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
பேஸ்புக்கில் பெயர் மாற்றம் மற்றும் எடுக்கப்பட உள்ள அதிரடி புதிய நடவடிக்கைகள் காரணமாக பேஸ்புக் இனி மெட்டா என்ற பெயருடன் புத்துணர்ச்சியுடன் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
