Connect with us

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் அதிருப்தி!

messenger

News

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் அதிருப்தி!

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் அதிருப்தி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலை தளங்கள் திடீர் என உலகம் முழுவதும் முடங்கியதை அடுத்து மில்லியன் கணக்கான பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து ஏராளமானோர் தகவல் பரிமாற்றம் செய்வதற்காக டுவிட்டர் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் கழித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மீண்டும் இயங்கியதாகவும் இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் மேலும் ஃபேஸ்புக் நிறுவனர் தனது பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக ஒரே வாரத்தில் பேஸ்புக் மெஸஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளது பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த முறை உலகம் முழுவதும் முடங்கவில்லை என்றும் ஒரு சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளதாகவும் அந்த முடக்கத்தை சரிசெய்யும் முயற்சியில் பேஸ்புக் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடக்கத்தின் காரணமாக டெலிகிராம் சமூக வலைதளத்திற்கு மில்லியன் கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top