மீண்டும் ’முக கவசம்’ கட்டாயம்…. அரசு அறிவிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதத்திலிருந்து மாஸ்க் அணிவது  கட்டாயம் இல்லை என  அறிவிக்கப்பட்டது.தேவைப்பட்டால் அம்மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தது.

இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களில்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் உத்திரபிரதேச மாநிலங்களில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் தான் இந்த அறிவிப்பு  என தெரிவித்துள்ளது.  அதாவது கெளதம் புத் நகர், காசியா பாத், ஹாபூர், மீரட், லக்னோ போன்ற மாவட்டங்களில் இந்த அறிவிப்பு கூறியுள்ளது.

மேலும், அதிகரித்துவரும் கொரோனாவின் தாகத்தை குறைக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை அமல்படுத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment