உச்சகட்ட பரபரப்பு!! ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு..!!

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் உட்பட 750 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் இன்றைய தினத்தில் வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

இருப்பினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 750 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் எழும்பூர் மைதானத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த சூழலில் இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி, சின்னையா முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், கேபி அன்பழகன், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 750 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா திட்டவட்டம்!!

மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டால் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். ஆனால் தற்போதைய நிலவரப்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment