பொதுத்தேர்வில் ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம்..!! மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்;
நம் தமிழகத்தில் மே இரண்டாம் தேதி முதல் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பொது செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.
அதன்படி ஏப்ரல் 27 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது செய்முறை தேர்வு தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பினை கல்வி இயக்கம் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது தேர்வு எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி பொதுத் தேர்வெழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் வழங்கப்படும் சலுகைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஈடுசெய் நேரம், வினாத்தாள் வாசிப்பாளர், சொல்வதை எழுதுபவர், ஆய்வக உதவியாளர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்துகிறது.
மாற்றுத் திறனாளி மாணவர் சொல்வதை எழுதுவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசத்துடன் மொழிப் பாடத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
