சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை? – இயக்குனர் விளக்கம்..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைப்பெற்று முடிந்த நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ  பள்ளிகள்  திறப்பதா அல்லது விடுமுறையை தொடர்வதா என்ற குழப்பம் சிபிஎஸ்இ பள்ளிகள் மத்தியில் இருந்தது.

குறிப்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரையில் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மெட்ரிகுலேஷன் இயக்குநகரம் என்பது தனியார் பள்ளிகளுக்கான இயக்குநகரம் என மாற்றப்பட்டு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்குமா? என்ற கேள்வியெழுந்தது. தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரையில் விடுமுறை கிடையாது இயக்குநகரம் தெரிவித்துள்ளது.

எனவே நாளை முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கும் என  மெட்ரிகுலேஷன் இயக்குநகர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment