Connect with us

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்.. அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!!!

797705

தமிழகம்

தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்.. அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!!!

விடுமுறை நாட்களில் கூடுதலாக கட்டணம் விதிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

தர்மபுரி பேருந்து நிலையத்தில் மலைகிராமமான வத்தல் மலைக்கு முதல்முறையாக அரசு பேருந்து பயணம் துவக்கப்பட்டு அமைச்சர்கள் வத்தல் மலைக்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் மலைகிராமங்களுக்கு முதல் முறையாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே பன்னீர்செல்வம், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரேஷன் பொருட்கள் கடத்துபவர்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என கூறினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top