விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: அமைச்சர் சிவசங்கர் அதிரடி!!

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு 11 லட்சம் வசூலித்ததாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன் படி, இதுவரையில் 11 லட்சத்து 4 ஆயிரம் ரூபார் அபராதமாக ஆம்னி பேருந்துகளில் வசூலித்தாக கூறினார். அதோடு வரும் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு உயர்வு ஏற்படாதவாறு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்தில் வருவாயைப் பெருக்கும் வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அதன் படி, மாநகர அரசு பேருந்துகளில் பயணிகளின் இருக்கைகளில் முன்புறம் மற்றும் வெளிப்புற கண்ணாடிகளில் விளம்பரங்கள் செய்துள்ள ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு இதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.