கோவைக்கு எக்ஸ்ட்ரா 50 எம்.பி.பி.எஸ் சீட்! தமிழகத்திற்கு 9150 எம்.பி.பி.எஸ் சீட்டுகள்!!

படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் எம்பிபிஎஸ் பட்டம் என்பது மிகப் பெரிய கனவாக தற்போது நிலவி வருகிறது. ஏனென்றால் மருத்துவ படிப்பிற்கு நீட்  நுழைவு தேர்வு பலரை மருத்துவராக தடையாக காணப்படுகிறது.இதனால் தமிழகத்தில் நீட் நுழைவு தேர்வினால் தோல்வியடைந்தவர்கள் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நீட்

குறிப்பாக இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வினால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக காணப்படுகிறது. காரணம் அவர்கள் கனவான எம்பிபிஎஸ் சீட் அவர்கள் கிடைக்காததுதான்.

இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 9 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்பு இடங்களில் எண்ணிக்கை 9 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைத்திருக்கிறது. நீட் மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்து வருகிறார்;அதனை ஒன்றிய அரசுக்கு பரிந்துரைப்பார் என்ற நம்பிக்கையும் உள்ளது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment