ஹிஜாப் விவகாரம்: உள்நாட்டு விவகாரத்தில் வெளிக்கருத்துக்கள் ஏற்கப்படாது!

தற்போது இந்தியாவில் மாணவர்களுக்கு இடையே பெரும் ஹிஜாப் விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் பல நாட்களுக்கு பின்பு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது.

அப்போது இஸ்லாமிய பெண்கள் தங்களது வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வந்தனர். அவர்களை ஹிஜாப் அணிவதால் வகுப்பறைகளுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் இந்துத்துவ அமைப்பினர் காவி துண்டுகளைப் போட்டு வருவோம் என்று ஹிஜாபுக்கு விரோதமாக கூறுகின்றனர்.

இதுகுறித்து கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனலாக கருத்துக்கள் பரவி கொண்டு வருகிறது. நம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் ஹிஜாப் குறித்து கருத்துக்களை கூறிக்கொண்டு வருகின்றனர்.

இவையெல்லாம் தாண்டி பாகிஸ்தானிய பெண் ஒருவர் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து கூறி இருந்தார். இதற்கு வெளியுறவு துறை அமைச்சகம் நெத்தியடியான பதிலை கூறியுள்ளது.

அதன்படி உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்களை ஏற்கப்படாது என்று கூறியுள்ளது உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்படாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வெளிநாடுகள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் வெளியுறவுத்துறை இவ்வாறு விளக்கமளித்துள்ளது. ஹிஜாப் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது, இந்த பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க படுகிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு ஜனநாயக நெறிமுறைகளின்படி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment