‘மாஸ்டர்’ படத்தில் இருந்து இன்னும் நாங்க வெளியில வரலை: கமலிடம் கூறிய கவின்!

650921c9023fb8692ece9a9f3fb4cee8

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் சோம் வெளியேறினார் என்பதை பார்ப்போம். இந்த நிலையில் அடுத்ததாக ஒருவரை வெளியேற்றுவதற்காக கவின் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே செல்ல உள்ளார் 

உள்ளே செல்லுமுன் கமல்ஹாசனிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார். பிக்பாஸ் களம் தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது என்றும் இந்த களத்தின் காரணமாக தற்போது சினிமா பணிகள் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார் 

மேலும் உங்களுடைய ’விக்ரம்’ படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றேன் என்றும் இப்பொழுதுதான் ’மாஸ்டர்’ படம் பார்த்து அதில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றோம் என்றும் உங்கள் விக்ரம் படத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்

ec8513fe0e7c25afff65e53fcf8a2cc4

நீங்கள் விக்ரம் படத்தில் நடித்த டிரைலர் காட்சிகளை பார்த்து அசந்து விட்டோம் என்றும் ஆரம்பித்து விடலாமா என்று நீங்கள் கேட்டது இன்னும் நாங்கள் எங்களுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது என்றும் அவர் கூறினார் 

அதற்கு கமல்ஹாசன் விரைவில் ஆரம்பித்துவிடலாம் விரைவில் திரையிலும் பார்க்கலாம் என்று கூறினார். மாஸ்டர் திரைப்படம் குறித்து கமல்ஹாசனிடம் கவின் கூறிய கூறியதை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் அது தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் கவின் யாரை வெளியே அழைத்து வரப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.