வாகனங்களின் அனைத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு!

கடந்தாண்டு இந்தியாவில் பரவிய கொரோனாவினால் பெரும் பொருளாதார வீழ்ச்சி உருவானது. அதனை சரிகட்டும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் அம்மாநில மக்களுக்கு பல்வேறு தளர்வு முறைகளை அறிவித்து இருந்தன.

இந்த நிலையில் கொரோனா காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் இந்த ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அக்டோபர் 31-ம் தேதி வரை தான் ஓட்டுனர் உரிமம், அனுமதி சீட்டு, பொது போக்குவரத்திற்கான தகுதி சான்று புதுப்பித்தல் போன்றவை நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி, மேற்கு வங்க மாநிலங்களில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. கொரோனா  நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தினை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment