கால அவகாசம் நீட்டிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

d8b47bd3759e6f62750b0f97e7f3240c

ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு சற்று முன் அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் தொடக்கம் என்றும் அதற்குரிய வழி காட்டு நெறிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பிக்கும் காலம் ஆகஸ்டு 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று சட்ட பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment