அட்ராசக்க..!!! டெட் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…

ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகத்தில் விரைவில் நடைபெற இருப்பதால் இந்த தேர்விற்காக கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தேர்வு வாரியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக பி.எட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இதனை ஏற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையில் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்பித்த பின் மேலும் மாற்றம் செய்யக்கூடாது என கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment