தமிழகத்தில் மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு – அமைச்சர் அதிரடி தகவல்!

தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா அல்லது விடுமுறை நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது பேசிய அமைச்சர் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக பின்பற்றப்படுகிறதா தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி தூய்மை, விலையில்லா பொருட்களை உடனே வழங்குவது குறித்தும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

“TRAIN டிக்கெட் எடுப்போம், ஆனால் போக மாட்டோம்! விநோத கிராமம் !

மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படுமா? அல்லது விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.