கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சிறைக்காவல் தண்டனை நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையால் அவ்வப்போது அச்சுறுத்த படுவார்கள். ஒரு சில நேரத்தில் இலங்கை கடற்படை  துப்பாக்கி சுடுதலில் உயிரிழப்பும் நிகழும். இதற்காக தமிழகத்தில் பெரும் போராட்டம் நிகழும்.மீனவர்

ஒரு சில மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைக்கும். அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேருக்கு நவம்பர் 11-ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு என்று பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 14ம் தேதி இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இதனால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்கவைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரையும் நவம்பர் 11ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறைப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் பெரும் சோகம் நிலவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment