Connect with us

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் உண்டா?

Tamil Nadu

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் உண்டா?

3056e84c9c5662a41ea565c8817a2ef7

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்தார் 

இந்த ஆலோசனையை அடுத்து சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் ஆகஸ்ட் 9 வரை தொடரும் என்றும் கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அறிவிப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தளர்வுகள் என்பது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் மூன்றாவது அலை வருவதை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top