#Breaking தமிழகமே பரபரப்பு; ஸ்ரீமதி படித்த பள்ளியில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமததி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பள்ளி நிர்வாகத்தினர், மாணவி ஸ்ரீமதி  3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர் தரப்பில் மகள் கொலை செய்யப்பட்டததாகவும் கூறினர்.

இதுதொடர்பாக மிகப்பெரிய கலவரம் வெடித்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டுமென பெற்றோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி படித்த பள்ளியில் நாட்டுத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மாணவி மரணத்தை தொடர்ந்து கலவரம் நடைபெற்ற பள்ளியில் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தூய்மை பணியாளர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெடி பொருட்களை கைப்பற்றிய உள்ளதாக தகவல் இதுகுறித்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment